ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
உதயநிதி ஸ்டாலின், ஆரி அர்ஜுனா, தான்யா ரவிச்சந்திரன், இளவரசு உள்பட பலர் நடித்திருந்த படம் நெஞ்சுக்கு நீதி. ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக். படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கினார். படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது.
இதில் கலந்து கொண்டு உதயநிதி பேசியதாவது: மனதுக்கு நேர்மையான படத்தை கொடுத்துள்ளோம். அதற்கு கிடைத்த பாராட்டிற்கு நன்றி. தயாரிப்பாளர்கள் இருவருக்கும் நன்றி. எனக்கு எந்தவிதமான கஷ்டம் இல்லாமல் படம்பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி.
படம் பார்த்தபிறகுதான் படத்தில் ஆரிதான் ஹீரோ என்று தெரிந்தது. படத்தின் இயக்குனர் படத்தை தமிழுக்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்தான். ஜெயித்து காட்டிவிட்டார் அருண். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி அருண் மற்றும் அவரது மனைவிக்கு சமர்ப்பணம் என்றார்.
![]() |