ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கலர்ஸ் தமிழ் சேனனில் ஒளிபரப்பாக தொடங்கியிருக்கும் புதிய நிகழ்ச்சி வெல்லும் திறமை. கடந்த 4ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, ஹிந்தியில் ஒளிபரப்பாகும் தேஷ் கி ஷான் என்னும் நிகழ்ச்சியின் தமிழ் மொழிமாற்று நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சிக்கு சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை நிக்கி கல்ராணி நடுவராக பணியாற்றுகிறார். அவருடன் பிரபல கராத்தே நிபுணர் ஷிஹான் ஹுசைனி மற்றும் நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோரும் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.
வெல்லும் திறமை என்பது இந்தியா முழுவதிலும் உள்ள மக்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகும். அத்துடன் இந்த நிகழ்ச்சி அந்தந்த பகுதி மற்றும் உள்ளூர் பகுதி மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அவர்கள் நடனம் முதல் மாயாஜாலம், தற்காப்புக் கலைகள் வரை பிரமிக்கவைக்கும் தங்கள் திறமைகளை இந்த நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தி வியப்பில் ஆழ்த்த தயாராக உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி 16 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ளது. இதை ஆன்ட்ரூஸ் தொகுத்து வழங்குகிறார்.