பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

தமிழ் சினிமா உலகின் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். ஆரம்பம் முதலே வெற்றியை மட்டுமே பார்த்தவர். இடையில் 'பாய்ஸ்' படம் மூலம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றவர். அதேசமயம் அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'இந்தியன் 2', தெலுங்குப் படமான 'கேம் சேஞ்ஜர்' ஆகியவை எதிர்பாராத விதத்தில் மோசமான தோல்வியை சந்தித்தன. அது மட்டுமல்லாமல் கடுமையான விமர்சனங்களையும் பெற்றது.
மதுரை எம்.பி.யும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய 'வேள்பாரி' சரித்திர நாவலின் விழா ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ஷங்கர் 'முதல்ல என்னுடைய கனவுப்படமாக இருந்தது 'எந்திரன்'. இப்போது என்னுடைய கனவுப் படம் 'வேள்பாரி',” என்று பேசியிருந்தார்.
'வேள்பாரி' நாவலைப் படமாக்கும் வேலைகளை ஷங்கர் எப்போதோ ஆரம்பித்துவிட்டார். அதற்கான திரைக்கதை எழுதும் பணியும் முடிந்துவிட்டது என்று ஏற்கெனவே சில பேட்டிகளில் பேசியிருந்தார்.
'இந்தியன் 3' படத்தின் நிலை என்னவென்பது தெரியாத நிலையில் 'வேள்பாரி' படத்திற்கான வேலைகளில் ஷங்கர் இறங்கியுள்ளார் என்பது தெரிகிறது. இந்தப் படம் 'கேம் ஆப் த்ரோன்ஸ், அவதார்' போன்ற ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுக்க முடியும் என்றும் பேசியிருந்தார். அப்படிப்பட்ட படங்களாக எடுக்க வேண்டும் என்றால் சில 100 கோடிகள் தேவைப்படும். இரண்டு, மூன்று பாகப் படங்கள் என்றால் 1000 கோடியைக் கடந்தும் தேவைப்படும்.
ஷங்கரின் முன்னாள் உதவியாளரும், இன்றைய முன்னணி இயக்குனருமான அட்லி தற்போது அல்லு அர்ஜுன் நடிக்க, இயக்கி வரும் படத்தின் பட்ஜெட் 800 கோடி என்கிறார்கள். அதைவிடவும் அதிகமான பட்ஜெட் 'வேள்பாரி' படத்திற்குத் தேவைப்படலாம். அந்த அளவிற்கு அந்த நாவலில் உள்ள காட்சிகள் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக இருக்கிறது.
ஷங்கரின் கனவுப் படமான 'வேள்பாரி'யைத் தயாரிக்க யார் முன் வருவார்கள் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் பேச ஆரம்பித்துள்ளார்கள். தமிழ் சினிமாவின் கனவுப் படமாகவும் அமைந்து 1000 கோடிக்கும் அதிகமான வசூலை தமிழ் சினிமா இன்னும் பெறாத ஏக்கத்தை பூர்த்தி செய்ய யார் முன் வரப் போகிறார்கள்?.