ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இந்தியத் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். சென்னை, மும்பை, துபாய், அமெரிக்கா என பறந்து கொண்டிருப்பவர். படங்களுக்கான பின்னணி இசை, இசை நிகழ்ச்சிகள் என கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இன்றைய செல்போன், இன்டர்நெட் யுகத்தில் அவைகள் இல்லாமல் எங்காவது சென்று ஒரு வாரம் ஓய்வெடுக்கலாமா என்றுதான் பலரும் யோசிப்பார்கள். அப்படி ஒரு ஓய்வு ஏஆர் ரஹ்மானுக்குக் கிடைத்துள்ளது. ஆனால், ஒரு வாரமல்ல, வெறும் இரண்டே நாட்கள்தான்.
மலையாளத்தில் பிருத்விராஜ் நடிக்கும் 'ஆடுஜீவிதம்' படத்திற்கு ஏஆர் ரஹ்மான்தான் இசையமைப்பாளர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டிலுள்ள வாடி ரம் என்ற இடத்தில் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அப்படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று படக்குழுவினருடன் இருந்து வருகிறார் ரஹ்மான்.
அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மலையில் ஒட்டகங்ள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இரண்டு நாட்களாக போன் இல்லை, இன்டர்நெட் இல்லை, ஒட்டகமும், ஆடுகளும் மட்டுமே நண்பர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். போன், இன்டர்நெட் இல்லாத இரண்டு நாட்களாவது ஏஆர் ரகுமானுக்குக் கிடைத்தது ஒரு வரமே.