'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள 'விக்ரம்' படம் ஜுன் 3ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது மற்ற சிறிய படங்கள் அதற்குப் போட்டியாக வருவதைத் தவிர்ப்பார்கள். எனவே, பெரிய நடிகர்களின் படங்கள் போட்டியே இல்லாமல் ஓடும்.
கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படத்திற்கு தமிழில் எந்தப் போட்டியும் இல்லை. ஆனால், ஹிந்தி, தெலுங்கு, மலையாளத்தில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஹிந்தியில் அன்றைய தினம் அக்ஷய்குமார் நடித்துள்ள 'பிருத்விராஜ்' படமும், தெலுங்கில் அடவி சேஷ் நடித்துள்ள 'மேஜர்' படமும், மலையாளத்தில் நிவின் பாலி நடித்துள்ள 'துறைமுகம்' படம் வெளியாக உள்ளது. இப்படி மூன்று மொழிகளில் அவர் மும்முனைத் தாக்குதலில் இருந்து சமாளித்தாக வேண்டும்.
மூன்று மொழிகளிலும் முக்கிய படங்கள் வெளியாவதால் 'விக்ரம்' படத்திற்கு அங்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் கமல்ஹாசன் மட்டுமே படத்தின் பிரமோஷனில் இறங்கியுள்ளார். பகத் பாசில், விஜய் சேதுபதி இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக நடிக்க வேண்டியுள்ளதால் அவர்கள் 'விக்ரம்' பட பிரமோஷனில் அதிகம் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்கிறார்கள்.