தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? |
இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் அவருடைய சம்பளம் பல கோடி என்கிறது டோலிவுட் வட்டாரம். படத்தின் வசூலில் குறிப்பிட்ட சதவீதம்தான் அவரது சம்பளமாம். அதனால், படத்தில் நடித்துள்ள கதாநாயகர்களை விடவும் அவருக்கு அதிக சம்பளம் என்கிறார்கள்.
ராஜமவுலி தற்போது புதிதாக ஒரு வால்வோர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். பல சினிமா பிரபலங்கள் சில பல கோடிகளுக்கு கார் வாங்குவார்கள். ஆனால், ராஜமவுலி வாங்கியுள்ள காரின் விலை 44 லட்சம் மட்டுமே. சிவப்பு நிறக் காரின் சாவியை அந்தக் கார் கம்பெனியின் அதிகாரி ஒருவர் ராஜமவுலிக்கு வழங்கியுள்ளார். இது பற்றிய தகவலை வால்வோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் ரூ.1100 கோடி வசூலைக் கடந்து, ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது.