என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

பான் இந்தியாவை பிரபலமாக்கிய ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடிக்கும் மகேஷ்பாபுவின் 29வது படம் பற்றிய அப்டேட் இன்று மகேஷ்பாபுவின் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நவம்பர் மாதம் அந்த அப்டேட்டைத் தருவதாக இயக்குனர் ராஜமவுலி அறிவித்துள்ளார். இருந்தாலும் மகேஷ்பாபுவின் முகம் இல்லாத ஒரு போஸ்டரை மட்டும் வெளியிட்டுள்ளார். அதில் மகேஷ்பாபுவின் நெஞ்சுப் பகுதி மட்டும் இடம் பெற்றுள்ளது. திருநீறு, சூலம், உடுக்கை, நந்தி ஆகிய டாலர்கள் இணைந்த கருப்பு மணிகளை அணிந்துள்ளார்.
இதன் மூலம் சிவபக்தனாக படத்தின் நாயகன் மகேஷ்பாபு இருப்பார் எனத் தெரிகிறது. ஆன்மிகம் சார்ந்த ஒரு கதையாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் அப்டேட் குறித்து ராஜமவுலி வெளியிட்டுள்ள பதிவில்,
“அன்பார்ந்த இந்திய மற்றும் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களே, மற்றும் மகேஷ் ரசிகர்களே, நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கி சிறிது காலம் ஆகிவிட்டது. உங்கள் ஆர்வத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இருப்பினும், இந்தப் படத்தின் கதை மற்றும் பரிமாணம் மிகவும் பிரம்மாண்டமானவை, வெறும் படங்கள் அல்லது பத்திரிகையாளர் சந்திப்புகள் இதற்கு நியாயம் செய்ய முடியாது என உணர்கிறேன்.
நாங்கள் தற்போது இந்தப் படத்தின் சாரத்தையும், ஆழத்தையும், நாங்கள் உருவாக்கும் மயக்கும் உலகத்தையும் காட்சிப்படுத்த ஏதோ ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது 2025 நவம்பரில் வெளியிடப்படும், மேலும் இது ஒரு முன்னெப்போதும் காணாத வெளிப்பாடாக இருக்க முயற்சிக்கிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.