அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் காஜல் அகர்வால். பல வெற்றிப் படங்களில், முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தவர். தமிழில் கடைசியாக 2023ல் வெளிவந்த 'கருங்காப்பியம்' என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் வந்தது கூட பலருக்கும் தெரியாது.
'இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 'இந்தியன் 3' படத்திற்கு மாறியது. இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை. எப்போதும் வரும் என்றும் தெரியவில்லை.
இதனிடையே, திருமணமாகி குழந்தைக்குத் தாயான பின்னும் தன் உடலமைப்பை கச்சிதமாக வைத்துள்ளார் காஜல் அகர்வால். கடந்த வாரம் புடவையில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள்தான் அதற்கு சாட்சி. காஜலா அது என பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இந்நிலையில் மாலத்தீவில் குடும்பத்துடன் ஓய்வுக்குச் சென்ற காஜல் அங்கு எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். பிகினி அணிந்த புகைப்படங்களும் அதில் உண்டு. இப்போது கூட அவர் கதாநாயகியாக நடிக்கலாம். அதை புகைப்படங்கள் மூலம் சொல்வதற்காகத்தான் அவர் அப்படங்களை அவர் வெளியிட்டிருக்கலாம். அடுத்த இன்னிங்ஸுக்கு வாருங்கள் காஜல்.