விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
தமிழிலிருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து தமிழிற்கும் அடிக்கடி டப்பிங் படங்கள் வெளியாவதுண்டு. தமிழிலிருந்து தெலுங்கிற்குச் செல்லும் படங்கள்தான் அதிக வசூலைப் பெறும். அந்த விதத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் தெலுங்கில் டப்பிங் ஆகி அங்கு நல்ல வசூலைக் குவித்தது.
மொத்தமாக 100 கோடி வசூலும், பங்குத் தொகையாக 54 கோடியையும் வசூலித்திருந்தது. அந்த வசூல்தான் இதுவரையில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட படங்களின் அதிக வசூலாக இருந்தது. அந்தப் பட்டியலில் இதுவரை தமிழ்ப் படங்களே இடம் பெற்றிருந்தன. “ரோபோ, ஐ, கபாலி, காஞ்சனா, சிவாஜி, முனி 3, பிச்சைக்காரன், லிங்கா, 24, ஏழாம் அறிவு, மாஸ்டர், முனி 2, அந்நியன், சந்திரமுகி,” ஆகிய படங்கள் 13 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றிருந்தன. ஒரே ஒரு கன்னடப் படமாக 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் 13 கோடி வசூலைப் பெற்று அந்தப் பட்டியலில் இருந்தது.
இப்போது வெளிவந்துள்ள 'கேஜிஎப் 2' அனைத்து தமிழ் டப்பிங் படங்களின் வசூலை முறியடித்து முதலிடத்திற்கு வந்துள்ளது. 'கேஜிஎப் 2' படம் மொத்த வசூலாக 103 கோடியையும் பங்குத் தொகையாக 64 கோடியையும் வசூலித்துள்ளது. இருப்பினும் 78 கோடிக்கு தெலுங்கில் டப்பிங் உரிமை விற்கப்பட்டுள்ள 'கேஜிஎப் 2' படம் லாபத்தைக் கொடுக்க கூடுதலாக இன்னும் 14 கோடி வசூலித்தாக வேண்டும்.