மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற ஒரே இந்தியர். இன்று ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28-ஆம் ஆண்டு நிறுவன தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆடைகளை வாங்க இயலாதவர்களுக்கு நிதி தந்து உதவும் திட்டத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய ஆடை ஒன்று 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆடையை பிரமோத் சுரடியா என்பவர் இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியுள்ளார் .