லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
'சென்னை 28' படம் மூலம் சிம்பிளான, யதார்த்தமான, ஜாலியான ஒரு சென்னைப் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமா உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'மாநாடு' படமும் வித்தியாசமான படமாக அமைந்து பெரிய வெற்றியைப் பெற்றது.
வெங்கட் பிரபு தற்போது 'மன்மத லீலை' என்ற படத்தை இயக்கி முடிக்க உள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் முன்னோட்டம் ஒன்று யு டியூபில் நேற்று வெளியானது. அதில் படத்தின் நாயகன் அசோக் செல்வன், நாயகிகளில் ஒருவரான ரியா சுமன் இருவரும் நடித்துள்ள முத்தக் காட்சி மட்டுமே இடம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள முன்னோட்ட வீடியோக்களில் இப்படி ஒரு வீடியோ வந்திருக்க வாய்ப்பேயில்லை.
முன்னோட்டத்திற்கு முன்பு வேகமாக நகரும் சில காட்சிகளில் பெண்களின் மார்புப் பகுதிகள் க்ளோசப் காட்சிளாக இடம் பெற்றுள்ளன. யு டியூபிற்கு சென்சார் இல்லை என்பதால் இப்படியான காட்சிகள் இடம் பெறுகிறது. இதனால்தான் பலரும் யு டியுப் வீடியோக்களுக்கும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள்.
வித்தியாசமான படங்களை எடுத்து வந்த வெங்கட் பிரபு இப்படி ஒரு ஆபாச முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளாரே என்று திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த டீசரை ரசித்து 'வேற லெவல்' என கமெண்ட் செய்து கொண்டாடி வருகிறது இளைய தலைமுறை. அதில் இடம் பெற்றுள்ள கமெண்ட்டுகளைப் பார்த்தால் இந்த முன்னோட்ட வீடியோவையே தடை செய்துவிடலாம் என்று கூடத் தோன்றும்.
படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்க இது போன்ற சர்ச்சைகள் அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.