மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை |
சினிமாவுக்கு வயது ஒரு தடையே இல்லை. இளம் வயதில் சாதித்தவர்களும் இருக்கிறார்கள், நடுத்தர வயதில் சாதித்தவர்களும் இருக்கிறார்கள், முதுமைப் பருவத்தில் சாதித்தவர்களம் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய படைப்பாளர்களின் வருகையில் சினிமாவிலும் மாற்றங்கள் நிகழ்வது வழக்கம்.
சமீப கால வருடங்களில் தமிழ் சினிமாவில் இளம் திறமையாளர்களின் வருகை அதிகமாகிவிட்டது. அவர்களது திறமைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சீனியர் ஹீரோக்களும் தயக்கம் காட்டுவதில்லை.
சீனியர் ஹீரோவான கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு இளைஞர். ரஜினிகாந்தின் 169வது படத்தை இயக்க உள்ள நெல்சன் திலீப்குமார் ஒரு இளைஞர். இவர்கள் இருவரும் தங்களது முந்தைய படங்களில் தனித்துவமாகத் தெரிந்தவர்கள்.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை இயக்கிய பிறகு தான் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்குக் கிடைத்தது. விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தை இயக்கி முடித்திருக்கும் நெல்சன் திலீப்குமாருக்கு அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் நடித்த படத்தை இயக்கிய பின்தான் இருவருக்குமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.
இந்த இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் கமல்ஹாசனையும், ரஜினிகாந்த்தையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்கலாமா ?.