மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பைவ் ஸ்டார், கந்தசாமி, திருட்டுபயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி கணேசன். மீ டூ புகார்கள் பரவலாக எழுந்த நேரத்தில் சுசி கணேசன் மீது பிரபல பெண் இயக்குனர் லீலா மணிமேகலை மீ டூ புகார் அளித்தார். அதை தொடர்ந்து நடிகை அமலா பாலும் திருட்டுபயலே 2 படத்தில் நடித்தபோது தனக்கும் அந்த பிரச்சினை இருந்தாக தெரிவித்திருந்தார். இவர்களுக்கு ஆதரவாக பாடகி சின்மயி கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அதன்பிறகு சுசி கணேசன் லீலா மணிமேகலை தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுவதாக கூறி அவர் மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சுசி கணேசன் அடுத்து தான் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா என்ற படத்திற்காக இசை அமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து படத்துக்கு இசை அமைக்க முன்பணம் கொடுத்துச் சென்றார்.
பெண்களை தவறாக பயன்படுத்தும் சுசி கணேசனுடன் இணைந்து இளையராஜா எப்படி பணியாற்றலாம். சுசி கணேசன் பற்றி அவருக்கு தெரியுமா என்று கேட்டிருந்தார் சின்மயி. லீனா மணிமேகலையும் இதுபோன்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் சுசி கணேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த மனுவில் உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தனக்கு எதிராக லீனா மணிமேகலையும், பின்னணி பாடகி சின்மயியும் பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் சமூக வலைதளங்களும், தனியார் இணையதள செய்தி நிறுவனம் ஒன்றும் பரப்பி வருவதால், தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாணைக்கு வந்தது. மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், லீனா மணிமேகலை, சின்மயி, கூகுள், பேஸ்புக், டிவிட்டர், தனியார் செய்தி நிறுவனம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.