சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

கமல்ஹாசன், த்ரிஷா, சிலம்பரசன் மற்றும் பலர் நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், மணிரத்னம் இயக்கத்தில் இன்று(ஜுன் 5) வெளியான படம் 'தக் லைப்'. இப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களுமே சிறப்பாக இருப்பதாக பட வெளியீடிற்கு முன்பு ரசிகர்கள் கூறி வந்தனர்.
குறிப்பாக 'முத்த மழை' பாடல் வெளியீட்டிற்கு முன்பு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் பாடகி தீ பாடலைப் பாடியிருக்க, இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி, அந்தப் பாடலை மிகவும் உணர்வுபூர்வமாக பாடி வரவேற்பைப் பெற்றார். தெலுங்கு, ஹிந்தியில் சின்மயில் அந்தப் பாடலைப் படத்தில் பாடியுள்ளார். தமிழிலும் சின்மயியை பாட வைத்திருக்கலாம் என்ற சர்ச்சையும் எழுந்தது.
ஆனால், கடைசியில் படத்தில் யாருடைய பாடலும் இல்லாமல், 'முத்த மழை' பாடல் இடம் பெறவேயில்லை. படத்தில் அந்தப் பாடல் இல்லாதாது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இவ்வளவு பரபரப்பு எழுந்த பிறகும் பட வெளியீடு வரை அதை படக்குழுவினர் மறைத்துள்ளார்கள். 'தக் லைப்' படத்தில் காட்சிகளில் முத்தமும் இருக்கிறது, மழையும் இருக்கிறது. ஆனால், 'முத்த மழை' பாடல்தான் இல்லாமல் போய்விட்டது.