மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அயலான்'. ஏலியன் தொடர்பான கதையில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு தடைபட்டு தடைபட்டு ஒருவழியாக முடிந்துவிட்டது. தற்போது மற்ற பணிகள் நடந்து வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ஜேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அயலான் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 24 ஏ.எம். நிறுவனம், தங்களிடம் பெற்ற 5 கோடி கடன் தொகையை, வட்டியுடன் சேர்த்து ரூ. 6 கோடியே 92 லட்சம் ரூபாய் திருப்பி தர வேண்டி உள்ளது. அந்த பணத்தை தராமல் அயலான் படத்தை வெளியிடவோ, விநியோகம் செய்யவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று(டிச., 23) விசாரணைக்கு வந்தபோது, ‛அயலான்' படத்தை ஜன., 3 வரை வெளியிட இடைக்கால தடை விதித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜன.3க்கு தள்ளி வைத்து ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.