சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி அடுத்து ஏற்கனவே தன்னை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தாடி வைத்த கெட்டப்புக்கு மாறி இருக்கிறார் ஜெயம் ரவி. அதையடுத்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என பல படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போகிறார். இது அவரது 30வது படமாகும். பெரும்பாலும் காதல் கலந்த காமெடி படங்களாக இயக்கி வந்துள்ள ராஜேஷ், ஜெயம் ரவி நடிக்கும் இந்தப்படத்தை குடும்ப கதையாக இயக்கப்போகிறார். 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.




