ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் நடிகர் ஆரி. தற்போது ‛‛அலேகா, பகவான், நெஞ்சுக்கு நீதி'' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அடுத்து "கண்மணி பாப்பா" திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீமணி என்கிற பி.அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகிறது. இப்படத்தில் ஆரியுடன் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இவர்களை பற்றிய விவரம் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். எஸ்.ஏ.எஸ் புரொடக்ஷன் சார்பில் யோகராஜ் தயாரிக்கிறார். நேற்று படத்திற்கான பூஜை நடந்தது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.




