'விடாமுயற்சி'யை விட 'குட் பேட் அக்லி' குறைவான டிக்கெட் புக்கிங்! | நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம் | குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் | ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி |
‛100' படத்திற்கு பின் இயக்குனர் சாம் ஆண்டன் - நடிகர் அதர்வா கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு ‛ட்ரிக்கர்' என பெயரிட்டுள்ளனர். தன்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், சீதா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட போஸ்டர் வெளியாகி உள்ளது. அப்பாவை ஜெயிக்க வைக்க போராடும் மகன் என்பது மாதிரியான கதையில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது.
‛‛இந்த படத்தில் துப்பாக்கி ஒன்று முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த படத்திற்காக இரண்டு, மூன்று தலைப்புகள் யோசித்து வைத்திருந்தோம். ஆனால் இந்த தலைப்பு தான் பொருத்தமாக அமைந்தது. மேலும் இன்றைய காலக்கட்டத்தில் நம் படங்களுக்கு உலகளவில் பார்வையாளர்கள் உள்ளனர். தமிழ் தெரியாத பார்வையாளர்களும் படத்துடன் எளிதில் ஒன்ற முடியும் என்பதால் ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தோம் என்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன்.