ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'. இப்படத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா, முதல் முறையாக ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.
அசத்தலான கிளாமர் ஆடையில் சமந்தாவின் பின்பக்க புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம், “மாஸ் இசையில் தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் தயாராகுங்கள். குயின் சமந்தா, அல்லு அர்ஜுனுடன் இணைந்து இதை கொல்கிறார்,” எனக் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது. இதன் டிரைலர் டிசம்பர் 6ம் தேதி யு டியூபில் வெளியிடப்பட உள்ளது.