ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
வினோத்ராஜ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், செல்லப்பாண்டி, கருத்தடையான் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கூழாங்கல்'. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சில விருதுகளையும் பெற்றுள்ளது. 94வது ஆஸ்கர் திரைப்பட விருதுகளுக்காக சிறந்த சர்வதேச திரைப்படங்களுக்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் இப்படம் கலந்து கொள்ள உள்ளது.
இன்னும் தியேட்டர்களில் வெளியாகாத இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு முன்பாக சிங்கப்பூரில் இன்று வெளியிடுகிறார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு முன்பாக சிங்கப்பூரில் வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவுடி பிக்சர்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை இணைந்து ஆரம்பித்துள்ள விக்னேஷ் சிவன், நயன்தாரா 'கூழாங்கல்' படத்தை அதன் தயாரிப்பாளர்களிடமிருந்து மொத்தமாக வாங்கினர். அவர்களது முதல் தியேட்டர் வெளியீடு இந்தப் படம் தான். இதற்கடுத்து “ஊர்க்குருவீ, ராக்கி, கனெக்ட்' ஆகிய படங்களை வெளியிட உள்ளார்கள்.