பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
மலையாள நடிகரும், ராஜ்யசபா உறுப்பினருமான சுரேஷ் கோபி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக திருச்சூர் மாவட்டம் புதூருக்கு சென்றார். அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் மரங்களை வனத்துறையினர் அகற்றவில்லை என அப்பகுதி மக்கள் சுரேஷ் கோபியிடம் புகார் அளித்தனர்.
அவர் ஒல்லூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சி.ஜே ஆண்டனியை அழைத்து இந்த புகாரை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி கவனிக்கும்படி கூறினார். அப்போது அந்த சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கோபிக்கு சல்யூட் அடிக்கவில்லை. இதை கவனித்த சுரேஷ் கோபி நான் ஒன்றும் மேயர் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் எனக்கு சல்யூட் அடிக்க மாட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்த சப் இன்ஸ்பெக்டர் பதில் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் இதுகுறித்து விளக்கம் அளித்த சுரேஷ் கோபி "சல்யூட் அடிக்க அந்த அதிகாரியை கட்டாயப்படுத்தவில்லை. அவரை சார் என்று மரியாதையுடன் தான் அழைத்தேன். நான் ஒரு எம்.பி, எனக்கு போலீசார் மரியாதை தர வேண்டும் என்பது ராஜ்யசபை செயலகம் கூறுகிறது. போலீசின் மரியாதை என்பது சல்யூட்தானே" என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து கேரள போலீஸ் அதிகாரிகள் சங்கம் கூறியிருப்பதாவது: எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு காவல்துறை வணக்கம் செலுத்த வேண்டும் என்று கேரள காவல்துறையின் நிலைப்பாட்டு உத்தரவில் கூறப்படவில்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மட்டுமே வணக்கம் செலுத்த வேண்டும். என்று கூறியுள்ளது