நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
மலையாள திரையுலகைச் சேர்ந்தவர் நடிகை ரீமா கல்லிங்கல். தமிழில் பல வருடங்களுக்கு முன்பு பரத் நடித்த 'யுவன் யுவதி' என்கிற ஒரே படத்தில் கதாநாயகியாக இவர் நடித்துள்ளார். தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்தவர், இயக்குனர் ஆசிக் அபு என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போதும் செலெக்ட்டிவான படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அத்துமீறல்களுக்கும் பாதிப்புகளுக்கும் எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர், அந்த பிரச்னைகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட சினிமா பெண்கள் நல அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறார்.
குறிப்பாக மீ டு பிரசாரம் சூடுபிடித்த சமயத்தில் அந்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை ஒரு பிடி பிடித்தார். இந்த நிலையில் ஆச்சர்யமாக அப்படி மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் சஜின் பாபு இயக்கத்தில் 'தி மித் ஆப் ரியாலிட்டி' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அக்.,16ல் ரிலீசாகிறது. மீ டு புகாருக்குள்ளான இயக்குனரிடமே பணியாற்றுவது உங்களுக்கே முரணாக தெரியவில்லையா என்று சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட போது அதற்கு பதில் அளித்த ரீமா கல்லிங்கல் இந்தப்படத்தில் நடிக்க என் சுயநலம் தான் காரணம் என்று பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் உண்மையிலேயே சுயநலக்காரி தான். எனக்கு இந்த படம் தேவைப்படுகிறது. நான் ஒரு நடிகையாக என் வேலையை செய்தே ஆக வேண்டும். அதுதான் முதல் காரணம். இதுவே நான் ஒரு இயக்குனராக அல்லது தயாரிப்பாளராக இருந்திருந்தால் நிச்சயமாக இது போன்ற நபருடன் இணைந்து பணியாற்ற விரும்ப மாட்டேன். அதற்கு பதிலாக வேறு நபரைத் தான் தேர்வு செய்வேன்.
அது மட்டுமல்ல குற்றச்சாட்டுக்கு ஆளான நபரே அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டார். மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் கூட இந்த விஷயத்தில் இருந்து நகர்ந்து விட்டார். தவிர இந்த இயக்குனருடன் பேசியபோது தான் இந்த விஷயத்தில் இன்னும் பல கோணங்கள் இருப்பது எனக்கு தெரிய வந்தது” என்று தன்னுடைய இந்த முடிவுக்கு சப்பைக்கட்டு கட்டி விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை ரீமா கல்லிங்கல்.
சவாலான கேரக்டர்
இப்படத்தில் தென்னை மரத்தில் ஏறும் காட்சிகள் அடங்கிய போஸ்டர் வெளியானது. இதுப்பற்றி ரீமா கூறுகையில், ''தீவில் எல்லா வேலைகளையும் நானே செய்து தனியாக வசிக்கிற பொண்ணு கேரக்டரில் நடித்துள்ளேன். படத்திற்காக பல நாள் பயிற்சிக்கு பினக், தென்னை மரம் ஏறக் கற்றுக் கொண்டேன். தென்னை மரம் ஏறுவது ஜாலியாக இருந்தது. படத்தில் சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். விமானத்தில் இருந்து குதித்திருக்கிறேன். பாம்பை கழுத்தில் போட்டு நடித்தேன். இது போன்ற சவாலான கேரக்டர்களில் நடிப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்,'' என்றார்.