பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாள திரையுலகில் சில மாதங்களுக்கு முன்பு நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி அங்கே பல வருடங்களாக நிலவி வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்தும், பெண்களுக்கு மரியாதை, சம உரிமை ஆகியவை மறுக்கப்படுவது குறித்தும் அவர்களுக்கான வேலை உறுதியின்மை குறித்தும் விரிவாக பேசியிருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் பெண் மேக்கப் கலைஞர்கள் மூன்று பேர் தங்களுக்கான வேலை உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக கூறி மேக்கப் கலைஞர்கள் சங்கத்தின் வாசல் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் துவங்கியுள்ளனர். ரீமா கல்லிங்கல் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் கேரள அரசிற்கு காட்டமாக சில கேள்விகளையும் வைத்துள்ளார்.
“சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என ஹேமா கமிஷன் அறிக்கை கூறியுள்ளது. ஆனால் தங்களது சங்கத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்டதற்காக மூன்று பெண்களை ஒப்பனை கலைஞர்கள் சங்கத்திலிருந்து அடாவடியாக நீக்கி உள்ளனர். இந்த 2025ல் இவர்கள்தான் கம்யூனிஸ்ட் கேரளாவில் வேலை செய்யும் பெண் தொழிலாளிகள்” என்று கூறி இவர்களது போராட்ட புகைப்படங்களை பகிர்ந்ததுடன் இதை முதல்வர் பினராயி விஜயனுக்கும் டேக் செய்துள்ளார் ரீமா கல்லிங்கல்.
நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை அமல்படுத்தப்பட வேண்டும் என கடந்த சில மாதங்களாகவே வலுவான கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இவர்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொழிலாளர் சம்மேளனமும் கண்டு கொள்ளவில்லை என்பதால் இதில் கேரள அரசு தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.