மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மலையாள சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை கதாநாயகியாக நடித்து வந்தவர் ரீமா கல்லிங்கல். தமிழில் பரத் நடித்த யுவன் யுவதி என்கிற ஒரே படத்தில் மட்டும் நடித்து உள்ளார். மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஆஷிக் அபுவை திருமணம் செய்துகொண்ட பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்தநிலையில் ‛சித்திரை செவ்வானம்' என்கிற படம் மூலம் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் நடித்துள்ளார் ரீமா கல்லிங்கல்
ஸ்டண்ட் இயக்குனரான ஸ்டண்ட் சில்வா முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரக்கனி, சாய்பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஆகியோருடன் ரீமா கல்லிங்கலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில் நடித்தது பற்றி கூறும்போது, “இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். ஸ்டண்ட் இயக்குனர் இயக்கும் படம் என்பதால் நாலு குத்துகளை விட்டு, பதிலுக்கு நாலு உதைகளை வாங்க வேண்டி இருக்குமோ என நினைத்தேன்.. ஆனால் முற்றிலும் மாறுபட்ட மென்மையான படமாக இதை உருவாக்கியுள்ளார்” என கூறியுள்ளார்.