அல்லு அர்ஜுன் ஸ்டைலை பின்பற்றி ராம் சரண், அகில் | இலங்கையில் சிக்கித் தவிக்கும் 'பராசக்தி' பணியாளர்கள் | ஓடிடி இழுபறியில் வீர தீர சூரன் | அஜித்தின் குட் பேட் அக்லி வெளியானது : ரசிகர்கள் கொண்டாட்டம்... எத்தனை தியேட்டர் தெரியுமா...! | AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் |
மலையாள சினிமாவில் மம்முட்டி, மோகன்லால் போல தீவிரம் காட்டாமல் இடையில் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி, அரசியல் பக்கம் பார்வையை திருப்பி இருந்தார் சுரேஷ்கோபி. இந்தநிலையில் தற்போது மீண்டும் பழைய வேகத்திற்கு மாறியுள்ள சுரேஷ்கோபி தற்போது தமிழில் ஒரு படம் உட்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார், நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 251வது படமான ஒத்தகொம்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இரண்டு அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.
இரண்டுமே மிரட்டல் ரகம் என ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். ஒன்றில் நரைத்த தாடியுடன் வயதானவராகவும் இன்னொன்றில் லாரி ட்ரைவராக இளமை தோற்றத்துடன் அதே பழைய துடிப்புடனும் காணப்படுகிறார் சுரேஷ்கோபி. இது தவிர நிதின் ரெஞ்சி பணிக்கர் டைரக்சனில் 'காவல், மற்றும் தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி.