'எம்புரான்' தயாரிப்பாளர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை | சினிமா மோகத்தால் சீரழியும் பெண்கள்.... எங்கே செல்லும் இந்த பாதை! | குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி |
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி. தற்போது இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ஏஜென்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்பை திரில்லர் கதையாக இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. ஜூலை முதல் இப்படம் துவங்க உள்ளது.
முதலில் இப்படத்தில் வில்லனாக நடிக்க கன்னட நடிகர் உபேந்திராவைத் தான் அணுகியுள்ளனர். ஆனால் அவர் பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் இறுதியில் மம்மூட்டியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளானர். மம்மூட்டி படத்தில் இணைந்தால் படத்திற்கு மலையாளத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் மோசட் எலிஜிபிள் பேச்சுலர் என்ற படத்திலும் அகில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.