சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

சாஹோ படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவர உள்ள படம் ராதே ஷ்யாம். ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் நேற்று யு டியூபில் வெளியிடப்பட்டது.
மிகுந்த எதிர்பார்ப்பைத் தூண்டிய இந்த டீசர், கேஜிஎப் 2 டீசர் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐந்து மொழிகளில் வெளியான இந்த டீசர் ஒட்டு மொத்தமாக 16 மில்லியன் பார்வைகளை மட்டுமே இதுவரை கடந்துள்ளது.
கடந்தமாதம் வெளியான கேஜிஎப் 2 டீசர் 24 மணி நேரத்தில் 72 மில்லியன் பார்வைகளைக் கடந்து முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.
ராதே ஷ்யாம் டீசர் தெலுங்கில் 5 மில்லியன், தமிழில் 4.3 மில்லியன், ஹிந்தியில் 4.2 மில்லியன், மலையாளத்தில் 2.3 மில்லியன், கன்னடத்தில் 1.1 மில்லியன் பார்வைகளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளது. மொத்தமாக 16.9 மில்லியன் பார்வைகளைத்தான் பெற்றுள்ளது.
கேஜிஎப் 2 பட டீசர்தான் இந்திய அளவில் யு டியூபில் வெளியான டீசர்களில் 168 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது.
ராதே ஷ்யாம் டீசர் கேஜிஎப் 2 டீசர் சாதனையை முறியடிக்காத நிலையில் ஆர்ஆர்ஆர் டீசர் வெளிவரும் போது அதாவது முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.




