ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழை தொடர்ந்து, மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று துவங்குகிறது... இந்த சீசனையும் நடிகர் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் விபரம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் நிகழ்ச்சியின்போதுதான் தெரியவரும்.
மலையாளத்தில் பிக்பாஸ் சீசன்-2 கடந்த வருடம் ஜன-5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த மார்ச் 20ஆம் தேதி அதாவது 76வது எபிசோட் வரை ஒளிபரப்பானது. அந்தசமயத்தில் கொரோனா தாக்கம் மற்றும் அதை தொடர்ந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த நிகழ்ச்சி 76 நாட்களுடன் நிறுத்தப்பட்டது..
அதேபோல கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சில சச்சரவு நிகழ்வுகளும், அவற்றை கையாள்வதில் மோகன்லால் பாரபட்சமாக நடந்து கொண்டார் என்றும் விமர்சித்து,, அவருக்கு பதிலாக நடிகர் சுரேஷ்கோபி இந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என சிலர் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சேனல் நிர்வாகம் இந்தமுறையும் மோகன்லாலுக்கே அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.