பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி |

கொரோனா தாக்கம் ஓரளவு குறைந்த நிலையில், இந்த புது வருடம் நடிகர் விஜய்சேதுபதிக்குத்தான் வெகு சிறப்பாக துவங்கியுள்ளது என்று சொல்லலாம். கடந்த ஜனவரியில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யை விட விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் பெரிதும் பாராட்டு பெற்றது. அதை தொடர்ந்து இந்த வாரம் தமிழில் வெளியாகியுள்ள 'குட்டி ஸ்டோரி' என்கிற ஆந்தாலாஜி படத்திலும், தெலுங்கில் வெளியாகியுள்ள உப்பென்னா படத்திலும் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதில் மாஸ்டர் படத்தை போலவே உப்பென்னாவிலும் விஜய்சேதுபதியின் நடிப்பு தெலுங்கு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.
இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தற்போது கலந்துகொண்டு வரும், படத்தின் ஹீரோ வைஷ்ணவ் தேஜ் விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் பற்றி சிலாகித்து கூறி வருகிறார்.. “படப்பிடிப்பின்போது விஜய்சேதுபதி எனக்கு சின்னச்சின்னதாக நிறைய டிப்ஸ் கொடுத்தார். அதையெல்லாம் விட ஒரு காட்சியில் நடித்தபோது அது சிறப்பாக வரவில்லை என அவருக்கு தோன்றினால், மானிட்டரை எல்லாம் பார்க்க வரமாட்டார். அடுத்த ஷாட் எடுக்கலாம் என உடனே தயாராகி விடுவார். மானிட்டர் பார்க்க விரும்பாத அவரது இந்த அணுகுமுறையை பார்த்து நான் ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன்” என கூறியுள்ளார் வைஷ்ணவ் தேஜ்.




