எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

கன்னடத்தில் யஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகி அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றியைப் பெற்றது கேஜிஎப் திரைப்படம். இந்த படத்தில் நடித்த பல நடிகர்கள் ரசிகர்களிடம் மிக பெரிய அளவில் பிரபலமானார்கள். அந்த வகையில் இரண்டு பாகங்களிலும் சாச்சா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கன்னட நடிகர் ஹரீஷ் ராய். 55 வயதாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (நவ-6) காலமானார். கடந்த சில வருடங்களாகவே புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகியிருந்த ஹரிஷ் ராய் சமீபத்தில் அதன் நான்காம் கட்ட தாக்கத்தை எட்டி இருந்தார்.
63 நாட்களுக்கு ஒரு முறை 3.5 லட்சம் மதிப்பிலான ஊசி ஒன்றை செலுத்தி இவ்வளவு நாட்களாக அவர் தன் வாழ்நாளை நீட்டித்து வந்தார். கன்னட நடிகர் யஷ்ஷும் அவரது சிகிச்சைக்கு செலவு செய்துள்ளார் என்று ஏற்கனவே ஹரீஷ் ராய் கூறியுள்ளார். தற்போது புற்றுநோய் பாதிப்பு முற்றி அவர் மரணமடைந்துள்ளார். இதை தொடர்ந்து கன்னட திரை உலகினரும் ரசிகர்களும் ஹரீஷ் ராயின் மறைவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.