23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
மலையாளத்தில் தற்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ்.. இவர் தனுஷ் நடித்த மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தவர். கொரோனா தாக்கத்திற்கு பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கயத்தில் இருந்து அதிக படங்களில் நடித்து வரும் நடிகர் இவர் ஒருவராகத்தான் இருக்கும்..
கடந்த அக்டோபர் மாதம் 'களா' என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, சண்டைக்காட்சியில் எதிர்பாராத விதமாக இவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு சிகிச்சை பெற்று ஓய்வெடுத்தவர், நவம்பர் முதல் வாரத்தில், தான் நடிக்கும் இன்னொரு படமான 'கானேக்கனே' என்கிற படத்தின் படப்பிடிப்பில் தான் அவர் கலந்துகொண்டு நடித்து முடித்தார்.
இதனை தொடர்ந்து காயம் நன்கு குணமானதும் ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்ட 'களா' படத்த முடித்துக்கொடுத்து விட்டு, வழக்கு என்கிற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆச்சர்யமாக இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 12 நாட்களிலே நடத்தி முடிக்கப்பட்டது. கலை படங்களை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனர் .சனல்குமார் சசிதரன் தான் இந்தப்படத்தின் இயக்குனர் என்பதாலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு தேக்குமர தோட்டத்திலே படமாக்கப்பட்டன என்பதாலும் படப்பிடிப்பு விரைவிலேயே முடிவடைந்து விட்டதாம்.