மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'வட்டார வழக்கு'. கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடித்துள்ளனர். வருகிற 29ம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறது.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ரவீனா ரவி பேசும்போது "2019-ல் நடித்தப் படம் இது. இயக்குனர் நினைத்தது போல படம் வந்திருக்கிறது. நல்ல கதை இது. எல்லோரும் இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படப்பிடிப்பு நடத்திய ஊரில் உள்ள கிராமத்து மக்களும் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தனர். எல்லோரும் ரிஸ்க் எடுத்து தான் நடித்திருக்கிறோம்" என்றார்.
இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் பேசும்போது " இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போகும்போது எல்லாம் எங்களை உற்சாகம் குறையாமல் படக்குழுவினர் பார்த்துக் கொண்டனர். இவர்களில் 80 சதவீதம் பேர் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்துள்ளனர். சிறு சிறு விஷயங்களுக்கு கூட எங்களை எதிர்பார்க்காமல் அவர்களது சொந்த காசை செலவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
பின்னணி இசையை நம்பி இருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு ராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். படத்தைப் பார்த்துவிட்டு அவர் சம்மதம் சொன்னார். ஒரு சின்ன படத்திற்கான அடிப்படைத் தேவைக்கான செலவு மட்டும் தான் ராஜா சார் கேட்டிருந்தார். ஆனால், அவர் கேட்டதில் 60 சதவிகிதம்தான் என்னால் கொடுக்க முடிந்தது. 40 சதவிகித பணம் என்னிடம் இல்லை. அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாது இசையை செய்து தருவதாக சொன்னார். அவர் காலில் விழுந்து விட்டேன். 12 நாட்கள் ஒரு தியானம் போல, இதன் பின்னணி இசையை செய்து கொடுத்தார். நல்ல படம் என்பதால், இதற்குப் பலரும் எந்தவிதமான எதிர்பார்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தனர்” என்றார்.