ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கன்னடத்தில் வெளியாகி, தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்தியிலும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎப்-2 படம் தயாராகி வருகிறது. இதில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதன் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார் நடிகர் பிரித்விராஜ்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொரு ஏரியாவிலும் அடுத்தடுத்து கால் பதித்து வரும் பிரித்விராஜ், கடந்த 2018ல் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை தனது பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் சார்பில் கேரளாவில் வெளியிட்டார். அதை தொடர்ந்து சில படங்களை வெளியிட்ட பிரித்விராஜ், தற்போது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேஜிஎப்-2 படத்தையும் கேரளாவில் வெளியிட இருக்கிறார்.
இதுகுறித்து பிரித்விராஜ் கூறியுள்ளதாவது, “கேஜிஎப் படங்களின் பாகங்களுக்கு நான் தீவிர ரசிகன். லூசிபர் படத்தை நான் முடித்த பிறகு, கேஜிஎப் தயாரிப்பாளரிடம் இருந்து, இணைந்து பணியாற்ற அழைப்பு வந்தது. அந்த முதல் வாய்ப்பே அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கேஜிஎப்-2 படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. ராக்கியின் வரவுக்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என குறிபிட்டுள்ளார்.