ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மலையாள திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரபல இயக்குனராக வலம் வருபவர் சத்யன் அந்திக்காடு. இவரது இரண்டு மகன்களில் ஒருவரான அனூப் சத்யன், கடந்தாண்டு துல்கர் சல்மான் நடித்த 'வரனே ஆவிஷ்யமுண்டு என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். இன்னொருவரான அகில் சத்யன், நடிகர் பஹத் பாசிலை வைத்து தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு 'பாச்சுவும் அற்புத விளக்கும்' என டைட்டில் வைக்கப்பட்டு, தற்போது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்படத்திற்கு கடந்தாண்டு ஜனவரி மாதமே பூஜை போடப்பட்டாலும் கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் இதன் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்களாம்.. ஏற்கனவே இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் ஒரு இந்தியன் பிரணயகதா மற்றும் ஞான் பிரகாசன் ஆகிய படங்களில் பஹத் பாசில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.