ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சிம்புவுக்கு ஜோடியாக 'ஈஸ்வரன்' படத்தில் நடித்த தெலுங்கு நடிகை நிதி அகர்வால், அதன்பிறகு 'பூமி, கலகத்தலைவன்' போன்ற படங்களில் நடித்தார். தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக 'ஹரிஹர வீரமல்லு' படத்தின் முதல் பாகத்தில் நடித்து முடித்துவிட்டு, பிரபாஸூடன் 'தி ராஜா சாப்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் பிரபாஸுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், ''ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாணுடன் நான் நடித்துள்ள ஹரிஹர வீரமல்லு என்ற படம் வரலாற்று சரித்திர கதையில் உருவாகி இருக்கிறது. ஆனால் தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வரும் தி ராஜா சாப் முந்தைய படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளே கிடையாது. அதனால் இப்படம் முழுக்க உண்மையான பிரபாஸ் உடன் நடித்துள்ளேன். இப்படத்தில் ரொமான்ஸ் உள்பட மற்ற காட்சிகளும் மிகவும் இயல்பாக வந்துள்ளது. அந்த வகையில் இப்படத்தில் பிரபாஸ் உடன் நடித்திருப்பது ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார் நிதி அகர்வால்.
இந்த தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் உடன் நிதி அகர்வால் மட்டுமின்றி மாளவிகா மோகனன், ரித்திக் குமார், சஞ்சய் தத் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.