இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
மலையாள திரை உலகில் சமீபத்தில் நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். 17 உறுப்பினர்களில் மொத்தம் எட்டு பெண்கள் பொறுப்புகளை பிடித்துள்ளனர். இதுவரை நடிகர் சங்கத்தில் ஆணாதிக்க மனோபாவம் இருந்து வந்தது என்று பலர் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது அப்படியே நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. ஆனாலும் இதை சிலரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
குறிப்பாக விக்ரம் நடித்த ‛அருள்' படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் கொல்லம் துளசி நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தபோது பெண்களுக்கு அதிகம் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறதே என்று கேட்கப்பட்டது.
அதற்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த கொல்லம் துளசி, ‛‛பெண்கள் ஆள்வார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆண்கள் ஆள்வார்கள் என்று நாங்கள் சொல்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறியதுடன், “ஆண் தான் ஆள வேண்டும்.. சரியா ? பெண்கள் அவர்களுக்கு கீழே இருக்க வேண்டும்.. இல்லையா ? ஆண்கள் எப்போதுமே பெண்களை விட ஒரு படி மேலே தான் இருக்க வேண்டும்.. இல்லையா ?'' என்று கூறினார். பின்னர் உடனடியாக, ‛‛இப்போது அவர்கள் எங்களுடைய எதிரிகள் ஆகிவிட்டார்கள். இது நான் சும்மா தமாஷுக்காக சொன்னேன்.. ஓகேவா ?'' என்று கூறியுள்ளார்.
மனதில் இருப்பது தானே வெளியே வரும் என்பதற்கேற்ப அவர் கூறிய இந்த கருத்துக்கள் மலையாள திரையரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இவரது கருத்துக்கு பெருமளவில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.