டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளாகவே விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த 241 பேர் மரணத்தை தழுவினார்கள். ஒரே ஒரு பயணி மட்டும் தப்பித்தார். அது மட்டுமல்ல அந்த விமானம் விழுந்த பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி உணவு விடுதியில் அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பல மாணவர்களும் கூட இந்த விபத்தில் பலியானார்கள். நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை இது ஏற்படுத்தியது. பலரும் தங்களது இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இந்த விபத்து குறித்து பேசும்போது, “நான் வளர்ந்தது படித்தது எல்லாமே ஆமதாபாத்தில் தான். அதிலும் விபத்து நடந்த இடத்திற்கு சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணி நகரில் தான் நான் படித்து வளர்ந்தேன்.. இப்போது விபத்து நடந்த இடம் எல்லாம் நான் சுற்றித்திரிந்த பகுதிகள் தான். அந்த நினைவுகள் இன்னும் எனக்கு பசுமையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட இடத்தில் இந்த விபத்து நடந்திருப்பதை நினைக்கும்போது என் மனம் மிகுந்த வேதனை தெரிகிறது. நான் மட்டுமல்ல, அங்கே இருக்கும் எனது நண்பர்கள் கூட அதிர்ச்சியில் இருக்கின்றனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.




