ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று பிறந்தநாள். இதை முன்னிட்டு அவரது வாழ்க்கையை தழுவி ‛மா வந்தே' என்ற படம் உருவாகிறது. இதில் அவரது வேடத்தில் மலையாள இளம் நடிகரான உன்னி முகுந்தன் நடிக்கிறார். கிரந்த் குமார் என்பவர் இயக்குகிறார். மோடி ரோலில் உன்னி முகுந்தன் நடிப்பது பலருக்கும் வியப்பாக இருந்திருக்கும்.
ஆனால் உன்னி முகுந்தனை பொருத்தவரை பிரதமர் மோடியின் தீவிரமான அபிமானி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதமர் மோடி கேரளா வருகை தந்தபோது அவரை நேரில் சந்தித்து அவருக்கு பரிசளித்து சில நிமிடங்கள் உரையாடியவர் தான் உன்னி முகுந்தன். அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றவர் என்பது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் உன்னி முகுந்தனின் சொந்த ஊர், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே அகமதாபாத்தில் தான் என்பது பலருக்கு தெரிந்திராத விஷயம்.
இதுகுறித்து உன்னி முகுந்தன் கூறும்போது, “பிரதமர் மோடியின் கதாபாத்திரத்தில் நடிப்பதை நான் பெருமையாக, கவுரவமாக கருதுகிறேன். நான் அகமதாபாத்தில் பிறந்து வளர்ந்தவன். என்னுடைய குழந்தை பருவத்தில் அப்போது குஜராத்தில் முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. அப்போதிருந்தே அவர் மீது எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உண்டு. இந்த படத்தில் அவரது அரசியல் பயணம் பற்றி பெரிதாக சொல்லாமல், அவர் ஒரு தேசத்திற்கான தலைவனாக எப்படி உருவானார், அவருடைய தாயுடனான பாசப்பிணைப்பு எத்தகையது என்பது பற்றி தான் சொல்கிறோம்” என்று கூறியுள்ளார்.




