கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மலையாள திரை உலகில் பிரபல வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழ் மற்றும் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்திருப்பவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய சிகிச்சைக்காக குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றபோது தர்மபுரி அருகே இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அதில் இவரது தந்தை சம்பவ இடத்திலேயே பலியானார். அதன் பிறகு சில தினங்களுக்கு முன்பு தான் அவரது இறுதி சடங்கு நடைபெற்றது.
பலரும் ஷைன் டாம் சாக்கோவுக்கு தங்களது ஆறுதல்களை அளித்தாலும் அவரது முந்தைய கால நடவடிக்கைகளுக்காக சில பேர் அவரை வழக்கம் போல விமர்சிப்பதையும் சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஷைன் டாம் சாக்கோ பிளஸ் ஒன் படித்தபோது அவரது பள்ளி ஆசிரியையாக இருந்த பிந்து என்பவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறும்போது, “கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு என் மாணவனாக இருந்தார் சாக்கோ. எப்போதுமே துருதுரு என்று இருந்தாலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குட் புக்கில் அவர் இடம்பெற விரும்பியதில்லை. அதே சமயம் நாடகங்களில் நடிப்பதன் மூலம் பள்ளிக்கும் ஊருக்கும் புகழைத் தேடிக் கொடுத்தார் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. அவர் பள்ளியை விட்டு சென்ற பின்னால் என் நினைவிலேயே அவர் இல்லை. அதன்பிறகு ஒரு படத்தில் பார்த்த பிறகு தான் அவர் நடிகராகிவிட்டார் என்று தெரிந்து கொண்டேன். இப்போது அவருக்கு ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டமான நிகழ்வு. இந்த சமயத்தில் அவர் மன உறுதியுடன் இருக்க வேண்டும். அவர் உங்கள் மாணவன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள் என்று கூட என்னிடம் சில பேர் கூறினார்கள்.
இந்த நேரத்தில் அவருக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.. டியர் ஷைன்.. உன் அப்பாவுக்காக, உன் அம்மாவுக்காக, நீ எடுத்துக்கொண்ட சத்தியத்திற்காக ஒரு நோக்கத்துடன் முன்னேறி செல்ல வேண்டும். நீ சினிமாவில் நீடிப்பாயா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் சினிமாவில் நீ இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதேபோல வாழ்க்கையில் நடிக்காதே.. அதை உண்மையாக வாழு.. சினிமாவில் மட்டுமே நடி” என்று ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும் விதமாக எழுதி உள்ளார் ஆசிரியை பிந்து.