ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாள சினிமாவில் கடந்த 2016ம் வருடம் வெளியான 'புலி முருகன்' திரைப்படம் மிகப்பெரிய கமர்சியல் வெற்றியை பெற்றதுடன் மலையாளத்தில் முதன்முறையாக 100 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்கிற பெயரையும் பெற்றது. மலையாள சினிமாவின் வியாபார எல்லையையும் விஸ்தரித்தது. மோகன்லால் அதுவரை தான் ஏற்று நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படம் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்தது.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற டிஜிபி ஆன டோமின் தங்கச்சேரி என்பவர் புலி முருகன் படத்திற்காக வங்கியில் வாங்கிய 2 கோடி ரூபாய் கடன் பாக்கியை கூட இன்னும் அடைக்காமல் இருக்கிறார்கள் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இப்படி திடீரென அவர் புலி முருகன் படத்தை பற்றியும் அதன் வங்கிக் கடனை பற்றியும் கூறுவதற்கு காரணம் அந்த படம் வெளியான சமயத்தில் அவர் கேரள பொருளாதார கழகத்தின் மேனேஜிங் டைரக்டராக பொறுப்பில் இருந்தார். அந்த சமயத்தில் தான் புலி முருகன் படத்திற்காக கடன் வாங்கப்பட்டது. ஆனால் அவர் கூறியுள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயம் என படத்தின் தயாரிப்பாளர் தோமிச்சன் முலகுப்பாடம் தனது சோசியல் மீடியா பக்கத்தின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “புலி முருகன் படம் திட்டமிட்ட நாட்களை விட அதிக நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதேபோல அதற்காக ஒதுக்கிய பட்ஜெட்டை விட அதிக செலவும் எடுத்தது. அந்த சமயத்தில் வங்கியில் கடன் வாங்கியது உண்மைதான். ஆனால் படம் வெளியான பிறகு கிட்டத்தட்ட மூன்று வாரங்களிலேயே 100 கோடி வசூலை தொட்டது. படத்திற்காக போட்ட முதலீட்டை விட பல மடங்கு லாபம் கொடுத்தது. இந்த படத்திற்காக வரியாகவே நான் மூன்று கோடி ரூபாய் கட்டி உள்ளேன். அப்படி இருக்கையில் அந்த இரண்டு கோடி ரூபாய் வங்கி கடனை கட்டவில்லை என்று சிலர் கூறி இருப்பது உண்மைக்கு மாறான விஷயம். எதற்காக அவர் இப்படி கூறியுள்ளார் என்று தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.