டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கடந்த வருடம் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மலையாளம் தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்ற படம் பிரேமலு. அந்த படத்தின் கதாநாயகி மமிதா பைஜூக்கு அடுத்தபடியாக படத்தின் நாயகன் நஸ்லேனை விட அவருக்கு நண்பராக படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சங்கீத் பிரதாப் தனது காமெடி நடிப்பால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு பிறகு தற்போது குணமாகி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த பிரொமான்ஸ் என்கிற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வரும் ஹிருதயபூர்வம் என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சங்கீத் பிரதாப். இந்த படத்தின் படப்பிடிப்பில் சங்கீத் பிரதாப்பின் பிறந்தநாள் என்பதை அறிந்து அதை கொண்டாடுவதற்காக கேக் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார்கள். ஆனால் அது வருவதற்கு தாமதமானது. மோகன்லாலும் படப்பிடிப்பிலிருந்து கிளம்ப வேண்டிய சூழல் என்பதால் அங்கே படப்பிடிப்பில் ஏற்கனவே மாலை சிற்றுண்டியாக தயாராகி இருந்த பஜ்ஜி ஒன்றை எடுத்து சங்கீத் பிரதாப்புக்கு ஊட்டி விட்டு அவரது பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்து கூறியுள்ளார் மோகன்லால்.
மேலும் படக்குழுவினரை பார்த்து, “இங்கே வேறு யாருக்கும் பிறந்த நாள் இருக்கிறதா சொல்லுங்கள்” என்று கலகலப்பாகவும் கேட்டுள்ளார் மோகன்லால். இயக்குனர் சத்யன் அந்திக்காடு கூறும்போது, “இப்படி ஒரு பிறந்தநாள் வேறு யாருக்கும் கொண்டாடப்பட்டிருக்காது” என்று தன் பங்கிற்கு நகைச்சுவையாக கூறினார். அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து கேக் வந்ததும் அதையும் வெட்டி படக்குழுவினருடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சங்கீத் பிரதாப்.




