மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
கன்னட திரையுலகில் முன்னணி நாயகனாக இருக்கும் சிவராஜ் குமார் தமிழில், ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து தனுசின் 'கேப்டன் மில்லர்' படத்திலும் நடித்தார். இந்த படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிவராஜ்குமார் பிரபலமானார். இந்த நிலையில் சிவராஜ்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
சிவராஜ் குமார் நடித்துள்ள 'பைரதி ரணகல்' கன்னட படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் சிவராஜ்குமார் பங்கேற்று வருகிறார். இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் தன் உடல்நலம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:
நானும் மனிதன்தான். எனக்கும் உடல் நல பிரச்னைகள் உண்டு. அதற்காக நான் சிகிச்சை பெற்று வருகிறேன். இரண்டு சிகிச்சை அமர்வுகள் முடிந்துவிட்டன. இன்னும் சில அமர்வுகள் உள்ளன. அந்த சிகிச்சை முடிந்த பின் அடுத்த கட்டமாக இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கிறேன். அதன் பிறகு ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் திரைத் துறைக்கு திரும்புவேன்.
எனக்கு இருக்கும் உடல் நல பிரச்னையை அறிந்துகொண்டபோது முதலில் பதற்றமாகத் தான் இருந்தது. ஆனால், அது தொடர்பாக மக்களையும் பதற்றப்படுத்த வேண்டாம் என்று வெளியில் சொல்லவில்லை. பின்னர் இதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வரவழைத்துக் கொண்டேன். இப்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது. கவலைப்பட தேவையில்லை. என்று கூறியுள்ளார்.
சிவராஜ்குமார் உடல்நலக்குறைவில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது ரசிகர்கள் அவர் உடல்நலம் தேற வேண்டி பிரார்த்தனைகள், வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.