ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் |
சினிமாவைப் பொறுத்தவரை வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமானதும் படம் வெற்றியோ தோல்வியோ ஆனால் அதற்கு அடுத்து மிகப்பெரிய பந்தாவுடன் வலம் வருவார்கள். ஆனால் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் இதற்கு அப்படியே நேர்மாறானவர் கடந்த ஆறு ஏழு வருடங்களில் வெறும் நான்கு படங்களில் மட்டுமே நடித்து அதில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். இவருக்கு ஸ்கிரிப்ட் சொல்ல பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் ஆர்வம் எதுவும் இல்லாமல் இயற்கையை ரசிக்கும் விதமாக மலைப்பகுதிகளில், வெளிநாடுகளில் சுற்றித் திரிவதையே விரும்புகிறார் பிரணவ்.
அந்தவகையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பண்ணையில் அங்குள்ள வேலைகளை கற்றுக் கொள்ளும் ஒரு அப்ரண்டிசாக சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார் பிரணவ். இங்கே வந்து அதை வைத்து பண்ணை எதுவும் தொடங்கும் திட்டம் அவருக்கு இல்லை தான். ஆனால் வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் தான் இதற்கு காரணமாம்.
இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ள பிரணவின் அம்மா சுசித்ரா மோகன்லால் கூறும்போது, தன் மகன் வருடத்திற்கு இரண்டு படங்களிலாவது நடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் அவர் தன்னுடைய பேச்சைக் கேட்பதில்லை என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதேசமயம் மகனுக்காக பல கதைகள் கேட்டு வருவதாகவும் ஆனால் தனக்கு பிடித்தாலும் கூட கதை விஷயத்தில் மகனின் முடிவு தான் இறுதியானது என்றும் கூறியுள்ளார் சுசித்ரா.