அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடிகர் ஷேன் நிகம் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் லிட்டில் ஹார்ட்ஸ் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஆண்டோ ஜோஸ் பெரேரா மற்றும் அபி திரீஷா பால் என்கிற இருவர் இணைந்து இயக்கியுள்ளனர்.
இந்த படம் இன்று (ஜூன்-7) உலகெங்கிலும் வெளியாகி உள்ளது. அதே சமயம் வளைகுடா நாடுகளில் இந்த படம் சில காரணங்களால் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் வெளியிட்டுள்ளதுடன் எதற்காக தடை விதிக்கப்பட்டது என்கிற காரணத்தை தற்போது சொல்ல முடியாது என்றும், வளைகுடா நாடுகளில் உள்ள ரசிகர்களிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.