நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
நடிகை மகிமா நம்பியார் தமிழில் சாட்டை, குற்றம் 23, கொடி வீரன், மகாமுனி என தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். அவருடன் நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் விநாயகர் சதுர்த்திக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் மகிமா நம்பியார் தனது டுவிட்டர் பக்கத்தில் சந்திரமுகி 2 குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவின் படி, " சந்திரமுகி 2 படத்தின் இறுதி பாடல் காட்சிகாக ஜார்ஜியா செல்கிறோம். ஒரு நடிகையாக லாரன்ஸ் மாஸ்டர் உடன் இணைந்து நடனம் ஆடுவது என் கனவு. இப்போது அது நிறைவேறுகிறது" என லாரன்ஸ் உடன் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார் மகிமா நம்பியார்.