என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு இணையான முன்னணி நடிகராக நடித்து வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. இடையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் கவனம் செலுத்திய அவர் சினிமாவில் ஒரு பெரிய இடைவெளியை விட்டார். தற்போது கடந்த சில வருடங்களாக மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. அதே சமயம் அரசியலிலும் தீவிர கவனம் செலுத்தி வந்த சுரேஷ் கோபி, சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதுவரை கேரளாவில் பா.ஜ.,விற்கு எம்.பி.,க்களே இல்லை என்கிற நிலையில் முதன்முதலாக அந்த பெருமையையும் பெற்றுத் தந்துள்ளார் சுரேஷ்கோபி.
அவரது வெற்றிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் சுரேஷ்கோபியும் நண்பருமான மம்முட்டி, சுரேஷ்கோபி நடிக்க உள்ள அடுத்த படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரிக்கிறது என்கிற அறிவிப்பை சூட்டோடு சூடாக வெளியிட்டு தனது வாழ்த்துகளை சுரேஷ்கோபிக்கு தெரிவித்துள்ளார். இந்த படத்தை யார் இயக்க உள்ளார்கள், மேலும் இதில் நடிக்க உள்ள நட்சத்திரங்கள் யார் என்பதெல்லாம் இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.