ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகர் மம்முட்டி தனது உடல்நல குறைவு மற்றும் சிகிச்சை காரணமாக கடந்த ஏழு மாதங்களுக்கு மேல் சென்னையில் உள்ள தனது வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். சமீபத்தில் தான், தான் நடித்துவரும் ‛பேட்ரியாட்' படத்தின் விசாகப்பட்டினம் மற்றும் லண்டன் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு 8 மாதத்திற்கு பிறகு கேரளா திரும்பினார். நேற்று கேரள மாநில முதல்வருடன் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டி அப்படியே திருவனந்தபுரத்தில் உள்ள மூத்த நடிகரான மதுவின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
70, 80களில் மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் வலம் வந்தவர் நடிகர் மது. தமிழில் ‛தர்மதுரை' படத்தில் ரஜினிகாந்தின் தந்தையாக நடித்தவர் இவர்தான். இப்போது சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று திருவனந்தபுரத்தில் தனது வீட்டில் வசித்து வரும் மதுவை சந்தித்துள்ள மம்முட்டி, “நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய சூப்பர் ஸ்டாரை சந்தித்தபோது எடுத்த படம்” என்று ஒரு புகைப்படத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.