எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
தமிழ்த் திரையுலகத்தைப் போலவே தெலுங்குத் திரையுலகமும் இந்த ஆண்டில் இதுவரையில் வசூல் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்காவது ஒரே ஒரு 'அரண்மனை 4' படம் கிடைத்தது. ஆனால், தெலுங்கில் அப்படி ஒரு படம் கூட அமையவில்லை. இருந்தாலும் 'கல்கி 2898 எடி, புஷ்பா 2, தேவரா' என சில பெரிய படங்கள் அங்கு வர இருப்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
இருந்தாலும் இனிமேல் அதிகாலைக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகள் ஆகியவற்றை நடத்த அனுமதிக்கப் போவதில்லை என தெலுங்கானா தியேட்டர்காரர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். இந்த திடீர் முடிவு தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதிகாலைக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகள் மூலம் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்து வந்தது. நடிகர்களுக்கும் ஒரு ஓபனிங் கிடைக்கக் காரணமாக இருந்தது. இந்நிலையில் தெலுங்கானா தியேட்டர்காரர்களின் முடிவு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே அதிகாலை காட்சிகள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுவிட்டன. காலை 9 மணிக்கு மேல்தான் இங்கு காட்சிகள் நடைபெறுகிறது.