தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமா உலகம் இந்த வருடத்தைப் பொறுத்தவரையில் கடும் சோதனைகளை சந்தித்து வருகிறது. 220க்கும் மேற்பட்ட படங்கள் இதுவரையில் வந்தாலும் 12 படங்கள்தான் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்த படங்களாக உள்ளன. அதிலும் சில படங்கள் மிக மிகக் குறைந்த லாபம், அல்லது ஓரிரு ஏரியாக்களில் மட்டுமே லாபத்தைக் கொடுத்துள்ளன.
வாராவாரம் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வந்தாலும் முதல் நாளில் கூட அரங்கம் நிறையாத அளவிற்குத்தான் உள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே ஓரளவிற்குக் கூட்டம் வருகிறது என்கிறார்கள். இது மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் நிலைமை. அதேசமயம், சிங்கிள் தியேட்டர்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறதாம். பகல் நேரக் காட்சிகளை ஆளில்லாத காரணத்தால் ரத்து செய்யும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது என்கிறார்கள்.
பெரிய படங்கள் வருவதற்கு முன்பாக இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்பு இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக பெரிய படங்களே இல்லாமல் சிறிய படங்களே வருவதால் நிலைமை மோசனமாகியுள்ளது. இந்த வருடம் முடிய அடிக்கடி இப்படி நடக்கும் என்றும் வருத்தப்படுகிறார்கள்.
2026 பொங்கலுக்கு விஜய், சிவகார்த்திகேயன் படங்கள் வரும் வரை பல சிங்கிள் தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.