அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
இங்கே தமிழ் சினிமாவில் வாரம் நான்கு படங்கள் ரிலீஸானாலும் பெரிய படங்களை தவிர மற்ற படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. அதேசமயம் மலையாள சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே வெளியாகும் படங்கள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வரவைக்கும் விதமாகவே உருவாகி வருகின்றன. சின்ன பட்ஜெட்டில் உருவான பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் 100 கோடி, 200 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்துகின்றன.
அந்த வகையில் தற்போது பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி உள்ள குருவாயூர் அம்பலநடையில் திரைப்படமும் வெளியான ஆறாவது நாளிலேயே 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் இதேபோன்று 50 கோடிக்கு மேல் வசூலித்த ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் விபின் தாஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். அது மட்டுமல்ல பிரித்விராஜ் மற்றும் மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
குடும்பப் பின்னணியில் கலகலப்பான காமெடி படமாக உருவாகியிருந்த இந்த படம் மேற்கூறிய எதிர்பார்ப்புகளால் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது. வந்தவர்களை ஏமாற்றாமல் திருப்திப்படுத்தியும் அனுப்பியது. அந்த வகையில் அடுத்து 100 கோடி வசூல் கிளப்பில் இணையும் படம் இதுவாக இருக்கும் என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது..